×

எசனை காட்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

பெரம்பலூர்,ஏப்.30: எசனை காட்டு மாரியம்மன் கோவிலில் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நடைபெற்றது. அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடியில் ஊர்வலமாக வந்த பக்தர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. பெரம்பலூர் அருகே உள்ள எசனை காட்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 14ம் தேதி காலை பூச்சொரிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடை பெற்றது. பின்னர் 24ம் தேதி முதல் நாள்தோறும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று (29ம் தேதி) அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சி நடை பெற்றது.

இதற்காக நேற்று பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்கள் நிறைவேற கன்னங்களில் 10 அடி, 15 அடி மற்றும் 20 அடி நீளத்திற்கு அலகு குத்தியும், டிராக்டர் மூலம் பறவை காவடிஎடுத்து அந்தரத்தில் தொங்கியபடி அலகு குத்தி, ஊர்வலமாக வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைகளில் அக்னிச் சட்டிகளை ஏந்தியபடி பக்தி கோஷமிட்டவாறு ஊர்வல மாகச் சென்று கோயிலை வந்தடைந்தனர். நேற்று இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதியுலா நடை பெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(30ம் தேதி) காலை 8 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது. அம்மன் அலங்கரிக் கப்பட்ட திருத்தேரில் எழுந் தருளி தேரோட்டம் முக்கிய வீதிகளில் நடைபெற உள் ளது. மே1ம்தேதி மாலை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்துள்ளனர்.

The post எசனை காட்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Chitra Festival ,Essenai Kathu Maryamman Temple ,PERAMBALUR ,AGNI SATI ,ESANAI KADU MARYAMMAN TEMPLE ,Esenai Kadu Maryamman ,Chitrai Festival ,Esanai Kathu Maryamman Temple ,
× RELATED வீரபாண்டி சித்திரைத் திருவிழாவிற்காக கடைகள் அமைக்கும் பணி விறுவிறு